பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

வாழ்வியல் நிகழ்வுகளும் தொகுப்புகளும். இன்னபிற மொட்டுக்களின் தேன்களும் குடித்து மகிழலாம் இங்கே...



குடியரசு தினத்தில் ஜனாதிபதி கலாமின் உரை...

புதுடெல்லி, ஜன. 26: நாட்டின் 58வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையட்டி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று இரவு பேசினார். அவர் பேசியதாவது:



நாட்டின் 58வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பருத்தி விதை உற்பத்தியில் பஞ்சாப் விவசாயிகள் படைத்துள்ள உலக சாதனை, பட்டு உற்பத்தியில் சாதனை படைத்துள்ள வடகிழக்கு மாநில கிராமம், குஜராத்தில் எல்லா கிராமங்களிலும் மின் வசதி, புரா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 65 கிராமங்களில் பொருளாதார தன்னிறைவு, காஷ்மீர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் நீதித் துறையும் அரசுடன் இணைந்து செயல்பட்டது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஏனெனில் இவர்களால் நமது நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளது.

1980ம் ஆண்டுகளில் இந்தியாவுக்காக எந்த பாட்டை பாடுவது என்ற கேட்ட குழந்தைகள், இன்று இந்தியாவுக்காக என்ன தருவது என்று கேட்கின்றனர்.



இதற்கு வளர்ச்சிப் பாதையில் நாடு செல்வதே காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது. நமது தொழில் நுட்ப திறனுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது போன்ற அம்சங்கள், முன்னேற்ற பாதையில் நாடு செல்வதை உறுதிபடுத்துகிறது. அதனால்தான், இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வருகின்றன.



இதைத்தவிர, நடுத்தர மக்களுக்கும் சாத்தியமாகியுள்ள விமானப் பயணம், ரயில்வேத் துறையின் அதீத வளர்ச்சி ஆகியவை சுற்றுலாத் துறைக்கு அதிக உத்வேகத்தை அளித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நமது சாதனை பிரமிக்க வைக்கிறது. விண்வெளித் துறையில் சாதனைகளை அளவிட முடியாது.



நம் நாட்டில் படிக்க வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் நமது பல்கலைக் கழகங்கள் இணைந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை அளிக்கின்றன.



வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக குறைந்துள்ளது. கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 75 சதவீதத்தை எட்டியுள்ளது. 40 கோடி வேலை செய்யும் மக்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9 சதவீதம்தான்.

வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து வெளிப்படையாக ஒருங்கிணைந்த முறையில் நாம் செயல்பட்டால், 2020ம் ஆண்டுக்கு முன்பாகவே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நாம் நனவாக்க முடியும். இதற்கான இலக்குகள்:



கல்வியறிவு 100 சதவீதம் என்பதுடன் வறுமை கோட்டுக்குகீழ் யாருமே இல்லாத நிலை.



மக்கள் தொகை வளர்ச்சி குறைவு



இந்தியர்கள் எல்லாரும் பட்டதாரிகள் அல்லது தொழில் பயிற்சி பெற்றவர்கள்



எல்லா கிராமங்களிலும் தொலைத்தொடர்பு மற்றும் மின்வசதி

நதிகள் தேசியமயம்: தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.



விவசாய வசதி



நபார்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இணைந்து குறுங்கடன், சிறு முதலீடு வசதிகளை அளிக்க வேண்டும்.



விவசாய உற்பத்தி, உணவு தானியங்கள் சேமிப்பு, உணவு பதப்படுத்துதல், விற்பனையை அதிகரித்தல் ஆகியவற்றில் வேளாண் விஞ்ஞானிகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து பாடுபடுதல்



குறுங்காப்பீடு, பயிர் காப்பீடு, கால்நடை காப்பீடு ஆகியவற்றுக்கு காப்பீடு நிறுவனங்கள் முக்கியத்துவம் தர வேண்டும்.

சேவைகள்



சேவைகளின் தரத்தை விமர்சனம் வாயிலாக உயர்த்துதல்



எல்லாரும் பாரபட்சமின்றி சேவைகளை விமர்சித்தல்



விமர்சனங்களை சரியான முறையில் எடுத்துக் கொண்டு அரசு மற்றும் தனியார் துறையில் சிறப்பாக செயல்படுதல்.

மனித வளங்கள்



21ம் நூற்றாண்டில் நாட்டுக்கு உயர்கல்வி படித்த ஏராளமான இளைஞர்கள் தேவை



குறிப்பிட்ட அறிவுத்திறனும் திறமைகளும் உடைய இளைஞர்களையும், உயர்கல்வி கற்ற இளைஞர்களையும் பல்கலைககழகங்களும், கல்வி முறைகளும் உருவாக்க வேண்டும்.



உயர்கல்வி கற்காதவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்தல்

தொழில் பயிற்சி



பள்ளிகளில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி



படித்த முடித்தபின் தொழில் தொடங்க குழந்தைகளை பெற்றோர் ஊக்குவித்தல்



தொழில் முயற்சிகளுக்கு கடன் வசதி

நம் கடமை



சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்பது



பொது இடங்களில் தூய்மையை காப்பது நம் எல்லாரின் கடமை



அரசியலில் இளைஞர்கள்



அரசியலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.



கல்வி பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் துறை இடம் பெற வேண்டும்.



தாமாக முன்வந்து ஓட்டுப்போடுதல்



தேசிய பாதுகாப்பு



நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை வணங்க வேண்டும்.



கல்வியாளர்களை மட்டுமின்றி சிறந்த ராணுவ வீரர்களையும் பல்கலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும்.

குழந்தை செல்வம்



குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதை சகித்து கொள்ள முடியாது. சகித்துக் கொள்ளவும் கூடாது.



குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்க வேண்டும்.

கொய்தது பிச்சி @ 7:57 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்